Analytics

Showing posts with label Nature. Show all posts
Showing posts with label Nature. Show all posts

Aug 14, 2023

மினுக்கு



பனிமூட்டம் படர்ந்த பின்னிரவு
பார்வைக்கு படவில்லை பனிநிலவு
ஆ!
பளிச்சென தோன்றி மறைந்ததென்ன?
விழி கண்ட பொழுதில் விரைந்ததென்ன?
அலற வைக்கும் ஆவியோ
உறைய வைக்கும் உருவமோ
நிலை கொள்ளா நினைவுத் துகளோ
திடுக்கிடச் செய் தீப் பிழம்போ
இல்லை
இல்லை
மின்னி மறைவது மின்மினி ஒன்று
அண்டத்தின் ஆதித் தீயைத் தன்
அங்கத்தில் அழகாய் அடக்கி
கட்டுக்கடங்கா என் கற்பனையோட்டத்தை
கண நேரத்தில் கட்டியிழுத்து
ஞானச் சுடரேற்றிச் செல்லும் ஒளி அது!

Oct 18, 2007

இயற்கை

முடிவில்லா பாதை போல் எதிர்கால எண்ணங்கள்,
நட்சத்திர குவியலாய் ஆசைக் கனவுகள்,
பார்க்கும் குழந்தையின் சின்னக் கண்களில்
எனக்கு மட்டுமே தெரியும் தண்ணிலவு,
நீந்தி விளையாட எண்ண அலைகள்,
மூழ்கி முத்துக்கள் எடுக்க ஆழ் மனம்,
சுடும் சொற்களால் வறண்ட நெஞ்சம்,
கோபம் கொண்டு கொதிக்கும் உள்ளம்,
நட்பு தந்த பசுமையான நினைவுகள்,
சுற்றம் தந்த நெடிந்துயர் பெருமை,
ஆசையில் பொழியும் பாச மழை,
பொங்கி பெருகும் ஆனந்த வெள்ளம்,
அன்பு பீரிடும் அருவி இதயம்,
நாள் தவறாது உதிக்கும் பசி,
மனதின் மையத்தில் ஓர் வெற்றிடம்,

இயற்கை - எனக்குள்ளும், என்னைச் சுற்றியும்.