Monday, August 14, 2023

காலை எழுந்தவுடன்...

புலருகையில் புல் முத்தமிடும் புதுக்காலையில்
பூங்காற்று பூச்சொரியும் இளவேனிலின் இதத்தை
மிதச்சூட்டில் மனம் வருடும் தெளித் தேநீரின்
உதடு படா உள்செல்லலில் உணர்ந்ததுண்டோ?

அருந்துகையில் அகம் நனைக்கும் அந்நீரில்
இழையோடும் இனிப்பு உன்னதம் உணர்த்தும்
அந்நாளின் அல்லல், ஆவல், ஆக்கங்களை
ஆர்வமாய் எதிர்கொள ஆற்றல் தரும் அவ்வமிர்தம்!

Obsession


my hook sways; slow like death
searching for a prey constantly
you land on it and latch on firmly
oh.. why did you end up being my prey


the prey doesn't know it's caught
but for the hook it's all it has
whole of it's being consumed by
torturous thoughts of its prey

the prey still swims free
unaware that the hook shudders;
twist and turn I may
letting go, moving on is the hardest

my hook lives only here
the farthest deepest trench
that i'm fated to call the mind
so far from the reality it shall never see

in that reality our worlds collide
when you are you and I am me
but those moments are so far and few
they fade so quickly as dusk to night

a different world comes to light
i know it to be unreal; imaginary but
there we've lived a thousand lives
light years removed from what is true

as reality recedes, then comes the hook
impaling the prey in its metal claws
the agony and anguish are not for the prey
but for the mind that possesses the hook

மினுக்கு



பனிமூட்டம் படர்ந்த பின்னிரவு
பார்வைக்கு படவில்லை பனிநிலவு
ஆ!
பளிச்சென தோன்றி மறைந்ததென்ன?
விழி கண்ட பொழுதில் விரைந்ததென்ன?
அலற வைக்கும் ஆவியோ
உறைய வைக்கும் உருவமோ
நிலை கொள்ளா நினைவுத் துகளோ
திடுக்கிடச் செய் தீப் பிழம்போ
இல்லை
இல்லை
மின்னி மறைவது மின்மினி ஒன்று
அண்டத்தின் ஆதித் தீயைத் தன்
அங்கத்தில் அழகாய் அடக்கி
கட்டுக்கடங்கா என் கற்பனையோட்டத்தை
கண நேரத்தில் கட்டியிழுத்து
ஞானச் சுடரேற்றிச் செல்லும் ஒளி அது!