Monday, August 14, 2023

மினுக்கு



பனிமூட்டம் படர்ந்த பின்னிரவு
பார்வைக்கு படவில்லை பனிநிலவு
ஆ!
பளிச்சென தோன்றி மறைந்ததென்ன?
விழி கண்ட பொழுதில் விரைந்ததென்ன?
அலற வைக்கும் ஆவியோ
உறைய வைக்கும் உருவமோ
நிலை கொள்ளா நினைவுத் துகளோ
திடுக்கிடச் செய் தீப் பிழம்போ
இல்லை
இல்லை
மின்னி மறைவது மின்மினி ஒன்று
அண்டத்தின் ஆதித் தீயைத் தன்
அங்கத்தில் அழகாய் அடக்கி
கட்டுக்கடங்கா என் கற்பனையோட்டத்தை
கண நேரத்தில் கட்டியிழுத்து
ஞானச் சுடரேற்றிச் செல்லும் ஒளி அது!

2 comments:

tamizh said...

Wowwwwww awesome 👌

Girl of Destiny said...

<3