Wishes to a friend who truly shows how fabulous 50 can be!
ஆதவனை அற்புதமாக
ஐம்பது முறை சுற்றி விட்டாய்!
கால ஒட்டத்தை கொண்டாடும் இவ்வேளையில்
நினைவோட்டங்களில் சற்று சிலிர்ப்போமே!
அருமையான பொழுதுகள் ஆயிரம் உண்டன்றோ?
கொலு என்றால் பொம்மைகள் ஆவோம்!
கச்சேரி என்றால் பாடகியர் ஆவோம்!
மேடை என்றால் நர்த்தகியர் ஆவோம்!
Party என்றால் பட்டையை கிளப்புவோம்!
ஆமாம்….. அதெப்படி?
சந்திக்கும்போதெல்லாம்
சந்தோஷம் மட்டுமே காண்கிறோம்?
அழகான தருணங்கள் அமைந்த நம் நட்பில்
அகவையின் இடைவெளியை அன்பால் அளந்தோம்!
எதிர்ப்பார்ப்பில்லா அடித்தளம் கொண்ட
இந்நேசத்தை என்றென்றும் தொடருவோம்!
பெயர்களில் மட்டுமல்ல -
வாழ்விலும் பல கலைகளில் சிறந்தவளே!
ஆனந்தத்தை உருவாய்க் கொண்டவளே!
தோழி… நீ பல்லாண்டு வாழி!!
No comments:
Post a Comment